மாநில அளவிலான கைப்பந்து போட்டி திண்டுக்கல் அணி சாம்பியன்

தேனி, டிச. 28: தேனி அருகே வீரபாண்டியில் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் திண்டுக்கல் அணி வென்றது. தேனி மாவட்ட கைப்பந்தாட்ட கழகம் சார்பில் ,தேனி அருகே வீரபாண்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது .இதில் தேனி, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 28 அணிகள் கலந்து கொண்டன.

இப்போட்டியில் திண்டுக்கல் அணியும், திருச்சி அணியும் இறுதி போட்டியில் மோதின. இதில் திண்டுக்கல் அணி முதல் இடம் பிடித்தது கோப்பையை வென்றது. இரண்டாம் இடத்தை திருச்சி அணியும், மூன்றாம் இடத்தை மதுரை அணியும், நான்காம் இடத்தை விழுப்புரம் அணியும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு மாநில கைப்பந்தாட்ட கழக மாநில தலைவர் ராமசுப்பிரமணி மற்றும் அனைத்து செட்டியார்கள் பேரவை மாநிலத் தலைவர் ஜெகநாத்மிஸ்ரா ஆகியோர் பரிசுக்கோப்புகளை வழங்கி பாராட்டினர். ஏற்பாடுகளை தேனி மாவட்ட கைப்பந்தாட்ட கழக நிர்வாகிகள் செய்தனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு