மாநகர் மாவட்ட திமுக சார்பில் மக்களின் தாகம் தீர்க்க நீர்-மோர் பந்தல் திறப்பு

கோவை, ஏப். 30: கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், சுட்டெரிக்கும் வெயிலில் மக்களின் தாகம் தீர்க்க நீர்-மோர் பந்தல் சிங்காநல்லூர் காமராஜர் ரோடு இஎஸ்ஐ மருத்துவமனை முன்புறம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் திறந்துவைத்தார். பொதுமக்களுக்கு நீர், மோர், இளநீர் மற்றும் பழ வகைகள் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது: கடுமையான வெயிலால் மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நீர் மோர் பந்தல் அமைத்து பழச்சாறு, நீர்-மோர் வழங்க திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது உத்தரவின் அடிப்படையில் இந்த நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. இதில், நீர், மோர் மட்டுமின்றி, இளநீர் மற்றும் திராட்சை உள்ளிட்ட பழ வகைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

மாநகர் மாவட்ட திமுக சார்பில், ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் நீர்-மோர் திறக்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு சிறப்பாக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நா.கார்த்திக் கூறினார். நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட அவைத்தலைவரும், கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கணபதி ராஜ்குமார், பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் பா.ஆனந்தகுமார், திமுக தீர்மான குழு இணை செயலாளர் பி.நாச்சிமுத்து, தீர்மான குழு உறுப்பினர் மு.ரா.செல்வராஜ், முன்னாள் அரசு வக்கீல்கள் கே.எம்.தண்டபாணி, பி.ஆர்.அருள்மொழி, வர்த்தக அணி அமைப்பாளர் போனஸ் பாபு, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புசெழியன், மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை, பொதுக்குழு உறுப்பினர்கள் சரஸ்வதி, புதூர் மணிகண்டன், பகுதி கழக செயலாளர்கள் நாகராஜ்,

அஞ்சுகம் பழனியப்பன், கே.எம்.ரவி, கிருஷ்ணராஜ், வி.ஐ.பதுருதீன், எஸ்.எம்.சாமி, செந்தமிழ்செல்வன் வார்டு செயலாளர்கள் டவுன் ஆனந்தன், அன்பு, ஏ.எஸ். நடராஜ், ஆனந்தன், சிவக்குமரன், தலைமை கழக பேச்சாளர் சிங்கை பிரபாகரன், அணிகளின் அமைப்பாளர்கள் சிவபிரகாசம், சுரேஷ்குமார், வடவள்ளி மணி, நா.பாபு, கண்ணன், அர்ஜுன், அறங்காவலர் குழு தலைவர் மெட்டல் ராஜாமணி, அறங்காவல் குழு உறுப்பினர் தனபால், மாமன்ற உறுப்பினர்கள் ஆதி மகேஷ்வரி, ஜெயப்பிரதா தேவி, பகுதி துணை செயலாளர்கள் திராவிட மணி, செல்வம், அவைத்தலைவர் ராமகிருஷ்ணன், டவுண் வேணுகோபால், ஜனார்த்தனன், நித்தியானந்தம், சண்முகசுந்தரம், சிவக்குமார், ராமநாதன், தென்னவர் செல்வம், சீனிவாசன், சுரேஷ், அன்பழகன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் செந்தில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு கோடை கால கூடைப்பந்து பயிற்சி நிறைவு விழா

2030ல் பசுமையான தமிழகம் உருவாக்குவோம் கரூர், திருச்சி பைபாஸ் சீத்தப்பட்டி பிரிவு மேம்பால குகை வழிப்பாதையில் குடிமகன்களின் நடமாட்டம்

மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு