மாதவரம் பால்பண்ணை சாலையில் ராட்சத பைப்லைன் சீரமைப்பு: அதிகாரிகள் நடவடிக்கை

திருவொற்றியூர்: திருவொற்றியூர், மணலி, மாதவரம் ஆகிய மண்டலங்களில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பைப்லைன் வழியாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இவ்வாறு மீஞ்சூரில் இருந்து வரக்கூடிய குடிநீர் திருவொற்றியூர், மாத்தூர் மற்றும் மாதவரம் ஆகிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீரேற்று நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து பொதுமக்களுக்கு லாரிகள் மற்றும் குழாய்கள் மூலம் தினசரி சப்ளை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், மாதவரம் பால்பண்ணை சாலையில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் அருகே நேற்று முன்தினம் இந்த ராட்சத பைப்லைன் உடைந்ததால், குடிநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடிநீர் வீணாக வழிந்தோடி, அப்பகுதியில் குளம் போல் தேங்கியது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. அதன்பேரில், அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்திற்கு வந்து, பார்வையிட்டு உடைந்த பைப்லைனை சீரமைத்தனர்.

Related posts

கோடைகால இலவச குத்துசண்டை பயிற்சி முகாம்

துறையூர் அருகே ஆட்டுக்கு தழை பறித்த பெண் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழப்பு

திருச்சி மாவட்டத்தில் மாஜி படைவீரர்கள் குழந்தைகளுக்கு சார்ந்தோர் சான்று பெற அழைப்பு