மாணவர்களுக்கு தனித்திறன் போட்டி

 

செங்கல்பட்டு: கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்ட அறிக்கை: பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் வருகிற செப்டம்பர் 2024ம் ஆண்டு சர்வதேச திறன் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் naanmudhalvan.tn.gov.in./tnskills என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு tnskills@naanmudhalvan.in வலைத்தளத்தினை பார்வையிடலாம். 10 துறைகளில் உள்ள 55 தொழிற்பிரிவுகளில் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 30ம் தேதி கடைசி நாளாகும். 1.1.1999 அன்றும், அதற்கு பிறகும் பிறந்த மாணவ, மாணவிகள் இளைஞர்கள், இளைஞிகள் இந்த போட்டிகளில் பங்கேற்க தகுதியுடையவர்கள். மேலும், விவரங்களுக்கு 044-2742 6554 என்ற தொலைபேசி எண்ணிலேயோ தொடர்பு கொள்ளலாம்.

Related posts

காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி ஒடிசாவில் மீட்பு தனிப்படை போலீசார் நடவடிக்கை

(வேலூர்) திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு அபராதம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி பாலாற்றில் குப்பை கொட்டிய

1225 டன் யூரியா மணலியில் இருந்து காட்பாடிக்கு வருகை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர் உட்பட 4 மாவட்டங்களுக்கு