மாசற்ற இருதய ஆலய ஆண்டு பெருவிழா தேர்பவனி திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு வேட்டவலம் புனித மரியாவின்

வேட்டவலம், ஜன.5: வேட்டவலம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலய ஆண்டு பெருவிழா கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலய ஆண்டு பெருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவிற்கு செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதிநாதன் தலைமை தாங்கி ஆடம்பர சிறப்பு கூட்டு திருப்பலியினை நடத்தி 51 சிறுவர், சிறுமியர்களுக்கு முதல் நற்கருணை மற்றும் உறுதிப்பூசுதல் அருளடையாளங்கள் வழங்கினார். விழாவில் வேட்டவலம் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி, உதவி பங்குத்தந்தை அமுதன் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் மாலை 6 மணியளவில் நடைபெற்ற புனித மரியாவின் ஆடம்பர தேர்பவனி ஊர்வலம் வாணவேடிக்கைகளுடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியே நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு புனித மரியாவை வழிபட்டனர். கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த ஆண்டு பெருவிழா நேற்று காலை உதவி பங்குத்தந்தை அமுதன் தலைமையில் நடந்த சிறப்பு நன்றி திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது