மழைநீர் தடையின்றி செல்ல நடவடிக்கை கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் வள்ளி திருமணம்

 

கீழ்வேளூர்,நவ.22: முருகன் சூரனை வதம் செய்ய தனது தயாரான சிக்கல் வேல் நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கி, திருச்செந்தூரில் சூரனை வதம் செய்ததாகவும். அந்த கொலை பாவம் தீர கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயில் தவம் இருந்தாகவும் ஐதீகம். சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் கந்தசஷ்டி விழா 12ம் தேதி காலை கணபதி ஹோமமும், சுந்தரகணபதிக்கு அபிஷேகமும், இரவு அனுக்ஞை விக்னேஷ்வர பூஜையும் நடந்தது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 17ம் தேதி காலை தேர் திருவிழாவும் இரவு சிங்காரவேலர் (முருகன்) சூரனை வதம் செய்ய தனது தயார் பார்வதியான வேல்நெடுங்கண்ணியிடம் சக்தி வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 18ம் இரவு தங்க ஆட்டுகிடா வாகனத்தில் சிங்காரவேலவர் எழுந்தருளி சூரசம்ஹாரம் நடைபெற்றது. 19ம் தேதி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று முந்தினம் இரவு வள்ளி திருக்கல்யாணம் நடந்தது.

வள்ளியும் முருகனும் ஒருவருக்கு ஒருவர் விரும்பிய நிலையில் முருகன் நாரதரை தூது அனுப்புகிறார். அதன் பின் வள்ளியை சோதிக்க முருகன் கிழவன் வேடத்துடன் சென்று வள்ளியிடம் திருமண செய்து கொள்ள கேட்டப்போது நான் முருகனை மட்டுமே திருமணம் செய்துகொள்வதாக கூறிவிடுகிறார். இதையடுத்து தனது சகோதரர் பிள்ளையாரை யானை வேடத்தில் வள்ளியை மிரட்ட கூறுகிறார். அதன்படி விநாயகர், யானை வேடத்தில் வள்ளியை துறத்துகிறார். அபோது பயந்து போன வள்ளி கிழவன் வேடத்தில் இருந்த முருகனை கட்டிபிடித்து கொள்கிறார். அப்போது முருகன் கிழவன் வேடத்தை கலைத்து வள்ளிக்கு காட்சி தந்து திருமணம் செய்து கொள்கிறார். இதை தத்ரூபமாக ஆண்டுதோறும் சிக்கல் கீழ வீதியில் வள்ளியை யானை விரட்டு காட்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோயில் முன் உள்ள திருக்கல்யாண மண்டபதில் முருகன்- வள்ளி, தெய்வானை திருமணம் நடைபெற்றது. நேற்று விடையாற்றி நடைபெற்று இன்று (22ம் தேதி) யதாஸ்தான பிரவேசத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Related posts

கோயிலில் சாமி சிலைகள் திருட்டு

கம்பம் உழவர் சந்தையில் மல்லித்தழை கிலோ ரூ.150க்கு விற்பனை

1,700 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற சீல்டு கால்வாய் சிமெண்ட் கால்வாயாகுமா?.. சிவகங்கை மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு