மல்லிகை பூவில் பூச்சி மேலாண்மை விளக்கம்

போச்சம்பள்ளி, ஏப்.26: பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், ஊரக வேளாண் அனுபவ திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டம், வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயின்று வரும் இறுதி ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டு, மாணிக்கனூர் கிராமத்தில் உள்ள விவசாயகளுக்கு மல்லிகை பூவில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளான உழவில் முறை, இயற்பியல் முறை மற்றும் வேதியியல் முறை பற்றிய பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். விவசாயிகளுக்கு பூச்சிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்