மறைஞாயநல்லூரில் உலக நன்மை வேண்டி ருத்ர ஹோமம்

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், மறைஞாயநல்லூர் வேதநாயகி அம்பிகா சமேத மேலமறைக்காடர் சுவாமி ஆலயத்தில் உலக நன்மை வேண்டி ருத்ர ஹோமம் நடைபெற்றது. தகட்டூர் ஞானசேகர சிவாச்சாரியார், ஆலய அர்ச்சகர் சொக்கநாத தேசிகர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் ருத்ர ஹோமம் நடத்தினர். பின்னர் கடம்புறப்பாடு நடைபெற்று, சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து வண்ண மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருஞானசம்பந்தர் அறக்கட்டளை குழந்தைவேல் ஆலய வளர்ச்சிகுழு உறுப்பினர்கள் பக்கிரிசாமி, கோவிந்தசாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டுறவு சங்கத்தில் அதிகாரி ஆய்வு

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்