மருந்து வணிகர்கள் மனு அளிப்பு

ஊத்தங்கரை, ஜன.11: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை மண்டல மருந்து வணிகர்கள் நல சங்க நிர்வாகிகள் மாநில உறுப்பினரும், நலவாரிய சேர்மன் திருநாவுக்கரசு தலைமையில், மண்டல நிர்வாகிகள் ஞானசேகரன், மோகன் குமார், சதீஷ், பாபு, காதர் பாட்ஷா, சிவா, விஜயகுமார் லேப் ரவி உள்ளிட்ட குழுவினர் ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில், மருந்து வணிகர்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்துமாறு தெரிவித்துள்ளனர். மனுவைப் பெற்றுக்கொண்ட எம்எல்ஏ இதுகுறித்து வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசுவதாக உறுதியளித்தார்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை