மருந்தாளுனர் நல கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்

சென்னை: காலி பணியிடங்களை நிரப்பக்கோரி மருந்தாளுனர் நல கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில் மருந்தாளுனர்கள் வேலைவாய்ப்பு உரிமையை பறிப்பதை கைவிடக்கோரியும், அரசு மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிடக்கோரியும், மருந்தாளுனர்கள் கூட்டமைப்பினர் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து மருந்தாளுனர்கள் கூறுகையில், ‘‘அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் நலன் கருதி காலியாக உள்ள மருந்தாளுனர்கள் பணியிடங்களை நிரப்ப அரசு முன்வர வேண்டும். மேலும் கடந்த ஆட்சியின் போது வைத்த கோரிக்கைகளுக்கு, திமுக எங்களுடன் ஆதரவாக இருந்தது தற்போது திமுக ஆட்சியில் இருப்பதால் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’’ என்றனர்….

Related posts

நீட் தேர்வு ஒரு தேசிய பிரச்னையாக மாறி உள்ளது தமிழகத்தின் வரி பகிர்வில் ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது: தயாநிதி மாறன் எம்.பி. பேட்டி

கலைஞர் எனக்கு தந்தை போன்றவர்: அமைச்சர் துரைமுருகன் உருக்கம்

குற்ற சம்பவங்களை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் : துணை ஆணையர் அதிரடி