மருத்துவமனை கழிவறையில் ஆண் குழந்தை சடலம் வீச்சு

அம்பத்தூர்: திருநின்றவூர், சி.டி.எச் சாலை, மேம்பாலம் அருகே தனியார் மருத்துவமனை உள்ளது. நேற்று மதியம் மருத்துவமனைக்கு சொந்தமான கழிவறையை திருநின்றவூர், நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர் கிருஷ்ணவேணி (65) சுத்தம் செய்ய சென்றுள்ளார். அப்போது, கழிவறையின் உள்ளே ஆண் சிசுவின் சடலம் கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தார். அதன்படி நிர்வாகத்தினர் திருநின்றவூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து மருத்துவமனை ஊழியர்கள் உதவியுடன் கழிவறையில் இருந்த 4 மாத ஆண் சிசுவை மீட்டனர். தொடர்ந்து சிசுவை திருவள்ளூர் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அந்த சிசு அங்கிருந்து பரிசோதனைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலில் உருவான சிசு என்பதால் அதனை மருத்துவமனை கழிவறையில் வீசி சென்றார்களா அல்லது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண்மணி யாராவது கழிவறைக்கு செல்லும்போது சிசு பிறந்ததா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தனியார் மருத்துவமனையில் உள்ள கேமராக்களை வைத்து ஆய்வு செய்கின்றனர்….

Related posts

இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கடலூர் சின்னத்துரை குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் வழங்கினார்