மரக்காணம் கலவரத்தால் ஏற்பட்ட இழப்பை வசூலிக்கலாம் என்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பாமக மேல்முறையீடு: திங்கட்கிழமைக்கு விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: மரக்காணம் கலவரத்தின்போது ஏற்பட்ட இழப்பை  வசூலிக்க தடையில்லை என்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.மரக்காணம் கலவர சேதத்தின் இழப்பை வசூலிப்பது தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணிக்கு அரசு போக்குவரத்துக் கழகம் நோட்டீஸ் அனுப்பியது. இதை் ரத்து செய்யக்கோரி ஜி.கே.மணி 2014ல் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசுக்கு ஏற்படுத்திய இழப்பீட்டை வசூலிக்க எவ்வித தடையும் இல்லை. அரசு அனுப்பிய நோட்டீசுக்கு பாமக தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்து பாமகவின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜி.கே.மணி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய  அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை  வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர்….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்