மயிலாப்பூர், கே.கே நகரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மின்வாரியம் அறிவிப்பு

சென்னை: மயிலாப்பூர்,  கே.கே.நகர், அம்பத்தூர், தண்டையார்பேட்டை கோட்டங்களில்  இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மயிலாப்பூர்,  கே.கே.நகர், அம்பத்தூர் மற்றும் தண்டையார்பேட்டை கோட்டங்களில் இன்று காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. மேற்குறிப்பிட்ட 4 பகுதிகளின் மின் கோட்ட அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் நடக்கவுள்ளது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மயிலாப்பூர், கே.கே நகர், அம்பத்தூர் மற்றும் தண்டையார்பேட்டை கோட்டங்களின் மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்