மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் எம்பி ராமலிங்கம் தலைமையில் நடந்தது

மயிலாடுதுறை பிப், 28: மயிலாடுதுறை ஏ.வி.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் எம்பி ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி, எம்எல்ஏக்கள், நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மாநகராட்சி, நகராட்சி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட இ-சேவை மையம், நில அளவை, சுகாதார நலப்பணிகள், பள்ளி கல்வித்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், செயல்படுத்தப்படும் மத்திய அரசின் நிதி சார்ந்த திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், ஒவ்வொரு திட்டத்தின் கீழ் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு மக்கள் பயன்பெற்றுள்ளனர். திட்டத்திற்கான இலக்கீடு எவ்வளவு, அதில் தற்போதுவரை இலக்கீடு எவ்வளவு எய்தப்பட்டுள்ளது என்பது குறித்து எம்பி ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள் அவர்களது பகுதியில் உள்ள தேவைகள் குறித்து கண்காணிப்புக் குழு தலைவரிடம் தெரிவித்தனர். மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், திட்டப்பணிகளை தரமாகவும் விரைந்து செயல்படுத்தியும் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமென்று மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சாலை பாதுகாப்புத் தொடர்பான பாராளுமன்ற தொகுதிக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளையும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவரும் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினருமான ராமலிங்கம் வழங்கி அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் ஷபிர் ஆலம், டிஆர்ஓ மணிமேகலை , மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் , ஆடியோக்கள் யுரேகா,அர்ச்சனா, ஒன்றியக்குழுத் தலைவர் காமாட்சி மூர்த்தி, ஒன்றியக்குழுத் தலைவர் கமலஜோதி தேவேந்திரன், செம்பனார்கோயில் ஒன்றியக்குழுத்தலைவர் நந்தினி தர், குத்தாலம் ஒன்றியக்குழுத் தலைவர் மகேந்திரன், சீர்காழி நகர்மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி, கொள்ளிடம் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயபிரகாஷ், தரங்கம்பாடி பேரூராட்சித்தலைவர் சுகுண சங்கரி, வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சித் தலைவர் பூங்கொடி, மணல்மேடு பேரூராட்சித் தலைவர் கண்மணி, குத்தாலம் பேரூராட்சித் தலைவர் சங்கீதா மாரியப்பன் மற்றும் அனைத்து துறை அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை