மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: கலெக்டர், எம்பி, எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்

செம்பனார்கோயில், ஆக.26: செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆறுபாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கலெக்டர் தலைமையில் எம்பி ராமலிங்கம், எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் நேற்று அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆறுபாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார். இதில் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் கலந்து கொண்டு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர், நேற்று நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் மாநிலம் முழுவதும் உள்ள 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான அனைத்து அரசு தொடக்கப்பள்ளியிலும் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த நிகழ்வு எல்.இ.டி. திரை மூலமாக திரையிடப்பட்டதை விழாவில் பங்கேற்ற அனைவரும் பார்வையிட்டனர். இந்த தொடக்க விழாவில் ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் லேகா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், செம்பனார்கோயில் ஒன்றியக்குழுத் தலைவர் நந்தினி தர், துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் துளசிரேகா ரமேஷ், தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, மீனா, திமுக தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் தர், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல் மாலிக், அமுர்த விஜயகுமார், ஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசி கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை