மயிலாடுதுறையில் குத்தாலம் குறுவட்ட தடகள போட்டிகள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் குத்தாலம் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் துவக்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் மயிலாடுதுறை சாய் விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. இதில், பள்ளி மாணவர்களுக்கான உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், குண்டு வீசுதல், வட்டு எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கிளாப்பர் அடித்து தொடக்கி வைத்தார். தொடர்ந்து, முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினார். இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணாக்கர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.

Related posts

பல்வேறு வழக்குகளில் தொடர்பு: நீதிமன்றத்தில் வாலிபர் சரண்

தூத்துக்குடி உப்பளத்தில்மின்மோட்டார் திருட்டு

சி.வ.அரசு பள்ளியில் ₹2 கோடியில் புதிய வகுப்பறை கட்டுமான பணிகள் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு