மனைவி பிரிந்ததால் கணவன் தற்கொலை

அம்பத்தூர்: அம்பத்தூர் மேனாம்பேடு பாரத் நகர் சர்ச் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(33). கால்டாக்சி டிரைவர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மம்தா(27) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுக்கு முன்பு தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில், மம்தா 2 மகன்களுடன் ரமேஷை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால், ரமேஷ் விரக்தியில் மது பழக்கத்திற்கு அடிமையானார். நேற்று முன்தினம் இரவு ரமேஷ், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அம்பத்தூர் அடுத்த மண்ணூர்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(32). ஓட்டல் ஊழியர். குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி வாசுகி(27). வெங்கடேஷன் குடும்ப செலவுக்கு மனைவியிடம் வாசுகியிடம் சரிவர பணம் தருவதில்லை என்று கூறப்படுகிறது. நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது வாசுகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். …

Related posts

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ₹8.5 கோடி தங்கம் பறிமுதல்: விமான நிலைய ஊழியர், பயணி கைது

ஓடும் காரில் தீவிபத்து

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் திட்ட பணிகளை பருவ மழைக்குள் முடிக்க வேண்டும்: ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி உத்தரவு