மத்திய மண்டலத்தில் மக்கள் குறைதீர் முகாம்: மனுக்கள் குவிந்தன

 

மதுரை, பிப். 7: மதுரை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. மதுரை மாநகராட்சி மத்திய மண்டலம் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நேற்று நடந்தது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு புதிய வரிவிதிப்பு, சொத்துவரி திருத்தம் மற்றும் பெயர் மாற்றம் தொடர்பாக 18 மனுக்கள், புதிய பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு தொடர்பாக 29 மனுக்கள், நகரமைப்பு தொடர்பாக 5 மனுக்கள், சுகாதாரம் தொடர்பாக 5 மனுக்கள் என மொத்தம் 57 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.

இம்முகாமில் துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, துணை ஆணையாளர் சரவணன், உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் பூபதி, நிர்வாக அலுவலர் மணியன், உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு