மத்திய அரசை எதிர்த்து 23ம் தேதி ஆர்ப்பாட்டம்

 

அரியலூர், ஜன.20: மத்திய அரசின் மோட்டார் வாகன திருத்த சட்டத்தை எதிர்த்து வரும் 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று சிஐடியூ அறிவித்துள்ளது. அரியலூர் போக்கு வரத்து வாகன சிஐடியூ சங்க அலுவலகத்தில், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. சங்க மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், செயலர் துரைசாமி, துணைத் தலைவர் சிற்றம்பலம், அருண்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய கொண்டு வந்த குற்றவியல் சட்டம், மோட்டார் வாகனம் சட்டம் ஆகிவற்றை எதிர்த்து, ஜன.23ம் தேதி அரியலூர் அஞ்சல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்