மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில் திருக்கல்யாணத்திற்கு பொருட்கள் நன்கொடை வழங்கலாம்

மதுரை, மார்ச் 26: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாணத்திற்கு பொருட்கள் நன்கொடை வழங்கலாம் என கோயில் இணை கமிஷனர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை தெரிவித்திருப்பதாவது: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை பெருவிழா வரும் ஏப்.12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஏப்.23ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் ஏப்.21ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு நன்கொடையாளர்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்க விரும்பும் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள், மஞ்சள் கயிறு, குங்குமம் பாக்கெட்கள் மற்றும் இதர அனைத்து பொருட்களையும் கோயில் அலுவலகத்தில் நேரடியாக வழங்கி உரிய ரசிது பெற்று கொள்ளலாம்.

இப்பொருட்கள் தொடர்பாக எந்த ஒரு தனி நபரிடமோ, நிறுவனத்திடமோ தொடர்பு கொள்ள வேண்டாம். அவ்வாறு யாரேனும் தனிப்பட்ட நபர்கள் அணுகினால் கோயில் நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம். மேலும் 0452- 2349868, 2344360 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது