மதுரை மாநகராட்சியின் தெற்கு மண்டல குறைதீர் முகாம்

மதுரை, ஜூன் 5:மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் மாதந்தோறும் பொதுமக்களுக்கான குறைதீர் முகாம் நடைபெறுகிறது. அந்தவகையில் நாளை (ஜூன் 6) மதுரை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் காலை 10 மணிக்கு குறைதீர்க்கும் முகாம், மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடக்கிறது.இதில் செல்லூர், ஆழ்வார்புரம், ஐராவதநல்லூர், காமராஜர் சாலை, பங்கஜம் காலனி, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, காமராஜர்புரம், பழைய குயவர்பாளையம், சின்னக்கடை தெரு,

லெட்சுமிபுரம், காயிதேமில்லத் நகர், 53 செட்டியூரணி,கீழவெளிவீதி, கீரைத்துறை, வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அனுப்பானடி, சிந்தாமணி, கதிர்வேல் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்தோர் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டுவரி பெயர் மாற்றம், புதிய சொத்துவரி, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பகன மனு கொடுத்து பயன்பெறலாம் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு கோடை கால கூடைப்பந்து பயிற்சி நிறைவு விழா

2030ல் பசுமையான தமிழகம் உருவாக்குவோம் கரூர், திருச்சி பைபாஸ் சீத்தப்பட்டி பிரிவு மேம்பால குகை வழிப்பாதையில் குடிமகன்களின் நடமாட்டம்

மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு