மதுரை புத்தகத் திருவிழா நிறைவு ரூ.1 கோடி புத்தகங்கள் விற்பனை

மதுரை, அக். 23: மதுரையில் நடந்த புத்தகத் திருவிழாவில், ரூ.1 கோடிக்கும் அதிகமான மதிப்பில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மதுரை தமுக்கம் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி ஒருங்கிணைப்போடு, கடந்த அக்.12ம் தேதி முதல் புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.இந்த புத்தக கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் மதுரை மட்டுமின்றி அருகில் உள்ள திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தேனி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளும் ஆர்வமுடன் பார்வையிட்டு தாங்கள் விரும்பிய புத்தகங்களை வாங்கிச்சென்றனர்.

நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில், ‘கடந்த 11 நாட்கள் நடந்த புத்தகத்திருவிழாவிற்கு தினந்தோறும் சராசரியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளனர்.இதன்படி மொத்தம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் புத்தகத் திருவிழாவை பார்வையிட்டு பயனடைந்துள்ளனர். இவர்களில் ஏராளமானவர்கள் தாங்கள் விரும்பிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், திறனாய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு த தரப்பினரின் புத்தகங்களை வாங்கிச்சென்றனர். இதனால் ரூ.1 கோடிக்கும் அதிகமான மதிப்பில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன’ என தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை