மதுரையில் வீட்டில் பணம் திருடியவர் கைது

மதுரை, செப். 24: மதுரை, ஜெய்ஹிந்த்புரம், 12வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (39). அதே தெருவில் வசிக்கும் தனலட்சுமியின் தந்தை நேற்று முன்தினம் வெளியூர் சென்றிருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை தனலட்சுமி வீட்டை விட்டு வெளியே வந்த போது, அவரது தந்தை வீட்டின் சுவர் மீது ஏறி மர்மநபர் ஒருவர் குதித்து தப்பியோடுவது தெரிந்தது. இதையடுத்து தந்தை வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்து ரூ.2,000 திருடு போயிருந்தது தெரிந்தது. இதுகுறித்த தனலட்சுமி புகாரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரித்தில், திருட்டில் ஈடுபட்டவர் அருகில் வசிக்கும் சிவனாண்டி (33) என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்