மதுரவாயல்-வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டது: ஐகோர்ட்டில் ஆணையம் தகவல்

சென்னை: சென்னை மதுரவாயல்-வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டு விட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுரவாயல்-வாலாஜா இடையிலான நெடுஞ்சாலை முறையாக பராமரிக்காதது தொடர்பாக, தாமாக முன் வந்து சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை எடுத்தது. இந்த வழக்கை விசாரணைக்கு வந்தபோது, நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை அங்குள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் 50 சதவீதம் மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கடந்த 2019ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக அங்கு 50 சதவீத சுங்க கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரவாயல்-வாலாஜா இடையிலான நெடுஞ்சாலை தற்போது சீரமைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.இதனால் கடந்த இரு ஆண்டுகளாக 50 சதவீத சுங்கக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த இந்த 2 சுங்கச்சாவடிகளில் இனி 100 சதவீத சுங்க கட்டணம் வசூலிக்கப்படலாம் என கூறப்படுகிறது….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்