மதுக்கரை நாச்சிபாளையத்தில் வணிகர் சங்கத்தின் சார்பில் 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

 

மதுக்கரை, செப்டம்பர்.11: மதுக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்காக பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாச்சிபாளையம் சிக்னல் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் கேமரா பொருத்துவதற்காக நாச்சிபாளையம் வணிகர் சங்கத்தின் சார்பில் ரூ.50 ஆயிரம் மதிப்பில் 4 கேமராக்கள் மதுக்கரை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு பொருத்தப்பட்டது.

அதன் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் வணிகர் சங்க பேரமைப்பின் கோவை மாவட்ட தலைவர் இருதயராஜ் தலைமையில் நாச்சிபாளையம் கிளை சங்க தலைவர் ராஜா என்கிற செந்தில்குமார் முன்னிலையில் மதுக்கரை காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் செந்தில் குமார் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்