மதுக்கரை அருகே டிப்பர் லாரி மோதி மாணவர் பலி

 

மதுக்கரை,மார்ச்11: மதுக்கரையை அடுத்த பாலத்துறை பகுதியை சேர்ந்த மயில்சாமி என்பவரின் மகன் நவீன்குமார் (20).இவர் திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை நவீன்குமார் தனது பைக்கில் நாச்சி பாளையத்திலிருந்து பாலத்துறை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது நாச்சிபாளையம் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சாலையோரத்தில் மாணவர்களை அழைத்துச் செல்ல வந்த தனியார் பள்ளி பேருந்து நின்று கொண்டிருந்தது. அப்போது பைக்கில் வந்த நவீன்குமாரும் பள்ளி பேருந்தின் பின்னால் தனது பைக்கை நிறுத்தினார். அப்போது பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நவீன்குமாரின் பைக் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட நவீன்குமார் முன்னாள் நின்ற பேருந்து கண்ணாடியில் மோதி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் பள்ளி பேருந்தில் இருந்த ஒத்தக்கால்மண்டபம் பகுதியைச் சேர்ந்த பிரமேஷ் (15), நாச்சி பாளையத்தை சேர்ந்த சாலுமித்ரா (12) ஆகிய இரு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மதுக்கரை போலீசார் நவீன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த விபத்து தொடர்பாக மதுக்கரை போலீசார் டிப்பர் லாரி டிரைவரான மீனாட்சிபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (30) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related posts

மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் தினசரி 16 லட்சம் டிக்கெட் விநியோகம்: மேலாண் இயக்குநர் தகவல்

புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து இன்ஜினியர் படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புழல் டீச்சர்ஸ் காலனியில் நாய் கடித்து சிறுவன் படுகாயம்