மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் இருவர் கைது செய்யாறு அருகே

செய்யாறு: செய்யாறு அருகே ஆற்று மணல் கடத்தி வந்த 4 மாட்டு வண்டிகளை போலீசார் நேற்று பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர். செய்யாறு காவல் உட்கோட்டம் தூசி காவல் சரக சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு, அஜீத்குமார் மற்றும் போலீசார் நேற்று செய்யாறில் சிறுநல்லூர் கிராமம் அருகே தீவிர மணல் கடத்தல் தடுப்பு சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது செய்யாறு ஆற்று பகுதியில் இருந்து வந்த மாட்டு வண்டிகளை மடக்கி சோதனையிட்டனர். அதில் அரசு அனுமதியின்றி ஆற்று மணல் எடுத்து வந்ததது தெரியவந்தது. உடனே 4 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் இருவர் தப்பி ஓடியனர். இச்சம்பவம் தொடர்பாக தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து உக்கல் கிராமத்தை சேர்ந்த வீரன்(47), நெமிலி கிராமத்தை சேர்ந்த ஜெயராமன்(34) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான நெமிலி அன்னப்பன், உக்கல் சூரியா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்