மணப்பெண் மாயம்

அரூர்: அரூர் தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சபீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பட்டதாரி. இவருக்கும், தர்மபுரியை சேர்ந்த ஒருவருக்கும் நேற்று திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு, வீட்டில் இருந்து சபீனா திடீரென மாயமானார். அவரை பெற்றோர், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அரூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

Related posts

கொல்லஞ்சி ஊராட்சி தலைவி குறித்து அவதூறு எஸ்பியிடம் மனு

அழகப்பபுரம் புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளானோர் பங்கேற்பு

குமரியில் மீண்டும் சாரல் மழை