மட்டப்பாறையில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

நிலக்கோட்டை, ஆக.4: நிலக்கோட்டை அருகே மட்டப்பாறையில் முன்னதாகவே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நிலக்கோட்டை அருகே ராமராஜபுரம், மட்டப்பாறை ஆகிய பகுதிகளில் சுமார் 120 ஹெக்டேர் பரப்பளவில் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நெல் அறுவடை காலம் துவங்கியுள்ள நிலையில் மட்டப்பாறையில் நேற்று தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்னதாகவே திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் கலந்துகொண்டு அரசு நெல்கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தார்.ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளிமலை, மாநில பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், ஊராட்சி செயலாளர் ராதாகிருஷ்ணன்,தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் கர்ணன், வழக்கறிஞர் முத்து மற்றும் தமிழக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலைய அதிகாரிகள் பரிமளம், சிவகாந்தன், பெரியசாமி மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் தினசரி 16 லட்சம் டிக்கெட் விநியோகம்: மேலாண் இயக்குநர் தகவல்

புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து இன்ஜினியர் படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புழல் டீச்சர்ஸ் காலனியில் நாய் கடித்து சிறுவன் படுகாயம்