மஞ்சூர் தனியார் பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் கலந்துரையாடல்

 

மஞ்சூர், ஆக.13: மஞ்சூர் புனித அல்போன்சா உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், மஞ்சூர் மேல்முகாமில் உள்ள புனித அல்போன்சா உயர்நிலை பள்ளியில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பள்ளி தாளாளர் ஜான் ஜோசப் தலைமையில், தலைமையாசிரியர் பாக்யநாதன் அனைவரையும் வரவேற்றார். இதை தொடர்ந்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற திறன்கள் குறித்து கலந்துறையாடினர். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இடைப் பருவத் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்