மசூதி முன்பு நின்றிருந்த பாக். மாஜி நீதிபதி சுட்டுக் கொலை

லாகூர்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண முன்னாள் தலைமை நீதிபதி ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாண முன்னாள் தலைமை நீதிபதி முஹம்மது நூர் மெஸ்கன்சாய் நேற்று பலுசிஸ்தானில் உள்ள மசூதிக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது தீவிரவாத கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவு அந்த மாகாண மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். …

Related posts

செக் குடியரசு நாட்டில் சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு, 26 பேர் படுகாயம்

3வது முறையாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் : இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வௌி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் வரலாற்று சாதனை!!

3வது முறையாக விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ்!