மகள் காதல் திருமணம்: தந்தை தற்கொலை

பெரம்பூர்: சென்னை ராஜமங்கலம் கண்ணகி நகரை சேர்ந்தவர் ஐயப்பன் (47). இவரது மனைவி சீதா (40). தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகளும், மகனும் உள்ளனர். கணவன், மனைவி  இருவரும் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த இவரது மகள், 2 நாட்களுக்கு முன் மாயமானார். போலீசார் விசாரணையில், கொளத்தூர் கண்ணகி நகர் அண்ணா தெருவை சேர்ந்த குமார் (26) என்பவரை இவரது மகள் காதலித்து, அவருடன் சென்றது தெரியவந்தது. நேற்று முன்தினம், சிறுமியை திருமணம் செய்து கொண்ட குமார், மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை  சிறுமியின் அண்ணனுக்கு அனுப்பியுள்ளார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஐயப்பன் வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர். …

Related posts

மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்

லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை விடுவிப்பது உடலில் கேன்சர் செல்லை செலுத்துவது போலாகும்: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து