மகளிர் கிரிக்கெட் அணியின் ஒப்பந்த வீராங்கனைகள் பட்டியல் வெளியீடு: ரூ.50 லட்சம் ஊதிய பிரிவில் கவுர், மந்தனா, பூனம் யாதவ்

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு இந்த பட்டியலில் 22 பேர் இடம்பெற்ற நிலையில் இந்த ஆண்டு 3 பேர் குறைக்கப்பட்டு 19 பேர் இடம் பிடித்துள்ளனர். கிரேடு ஏ பிரிவில் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, பூனம் யாதவ் ஆகிய 3 பேர் மட்டும் இடம்பிடித்துள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.30 லட்சம் ஊதியம் பெறும் கிரேடு பி பிரிவில், மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, தீப்தி சர்மா, பூனம் ராவத், ராஜேஸ்வரி, ஷபாலி வர்மா, ராதாயாதவ், ஷிகா பாண்டே, தனியா பாட்டியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் இடம்பெற்றுள்ளனர். ரூ.10 லட்சம் ஊதிய பட்டியலில், மான்சி ஜோஷி, அருந்ததி ரெட்டி, பூஜா வஸ்திரகர், ஹார்லீன் தியோல், பிரியா புனியா, ரிச்சா கோஷ் ஆகியோர் உள்ளனர்….

Related posts

பும்ரா ஒரு மேதை..அவரை பற்றி அதிகம் பேசப்போவதில்லை: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

சாம்பியன் பட்டம் வென்றார் கார்லஸ் அல்காரஸ்

39 ரன்னில் ஆல் அவுட் அகீல் சுழலில் மூழ்கியது உகாண்டா: வெஸ்ட் இண்டீஸ் சாதனை வெற்றி