மகளிர் உலக கோப்பை பைனல் ஆஸி. – இங்கிலாந்து இன்று மோதல்

கிறைஸ்ட்சர்ச்: ஐசிசி மகளிர் உலக கோப்பை பைனலில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.நியூசிலாந்தில் நடைபெற்று வந்த 12வது மகளிர் உலக கோப்பை ஒருநாள் தொடரில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.இதுவரை ஆஸ்திரேலியா 6 முறை உலக கோப்பையை முத்தமிட்டுள்ள நிலையில், இங்கிலாந்து 4 முறை சாம்பியனாகி உள்ளது.  நடப்பு தொடரின் லீக் சுற்றில் ஹாட்ரிக் தோல்வியுடன் தடுமாறிய இங்கிலாந்து பின்னர் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து அரையிறுதிக்கு முன்னேறியதுடன், அதில் வலுவான தென் ஆப்ரிக்கா அணியை வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது. அதே சமயம், ஒரு போட்டியில் கூட தோற்காமல் அரையிறுதிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா, அதில் வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்த்தி ஆதிக்கத்தை நிரூபித்தது.ஆஸ்திரேலியா 7வது முறையாகவும், இங்கிலாந்து 5வது முறையாகவும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வரிந்துகட்டுவதால், கிறைஸ்ட்சர்ச்சில் இன்று காலை 6.30க்கு தொடங்கி நடக்கும் இறுதிப் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. …

Related posts

டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி

டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து