போலி நகை மோசடி வழக்கில் மேலும் ஒருவர் மீது வழக்குப்பதிவு

காரைக்கால்,மார்ச் 14: தமிழகம் மற்றும் காரைக்காலில் தங்க முலாம் பூசி செம்புக்கம்பியாலானா போலி நகைகளை உருவாக்கி, வங்கிகள், அடகு கடைகளில் அடகு வைத்து கோடி கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக நிரவி காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜெரோம் ஜெசிமென்ட்(40), காரைக்கால் சின்னக்கண்ணு செட்டித்தெருவை சேர்ந்த பரசுராம் (45), திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமில் (30) காரைக்கால் சேர்ந்த ரமேஷ் (45), காரைக்கால் புதுத்துறையை சேர்ந்த முகமது மைதீன்(35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் முக்கிய புள்ளியான பெண் தொழிலதிபர் புவனேஸ்வரியை மூன்று தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.இந்நிலையில் காரைக்கால் காமராஜர் நகரை சேர்ந்த தேவதாஸ் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு 12 பவுன் செயினை அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் பெற்றுள்ளார். இதுநாள் வரை தேவதாஸ் நகை கடன் பெற்றதுக்கு வட்டி ஏதும் செலுத்தாததால் வங்கி மேலாளர் கோவிந்தராமானுஜம், அந்த நகையை பரிசோதித்த போது, அது போலி நகை என தெரியவந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் கோவிந்தராமானுஜம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேவதாஸை போலீசார் தேடி வருகின்றனர்….

Related posts

மயிலாடுதுறை அருகே பரபரப்பு; மாயமான பெண் வாய்க்காலில் சடலமாக மீட்பு: கட்டுமான நிறுவன வாகனம் மோதி இறந்ததாக உறவினர்கள் போராட்டம்

சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பு சீரமைப்பு: ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்

கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம்