போலி நகையை விற்க முயன்ற 3 பெண்கள் கைது உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் கண்ணமங்கலத்தில் நகை கடையில்

கண்ணமங்கலம், மார்ச் 2: கண்ணமங்கலத்தில் உள்ள நகைக்கடையில் போலி தங்க நகையை விற்பனை செய்ய முயற்சித்த 3 வடமாநில பெண்களை கண்ணமங்கலம் போலீசார் கைது செய்தனர். கண்ணமங்கலம் நகரத்தில் பிரபல நகை கடை இயங்கி வருகிறது. இக்கடையில் நேற்று வட மாநிலத்தை சேர்ந்த 3 பெண்கள், ஒரு கைக்குழந்தையுடன் 3 சவரன் நகையை விற்பனை செய்ய வந்துள்ளனர். அந்த நகையை பரிசோதித்த கடை ஊழியர்கள், அந்த நகைகள் தங்கமூலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து உடனடியாக கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார், வட மாநில பெண்களை காவல்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் உத்தரபிரதேசம் மாநிலம், காசிபூரை சேர்ந்த ரீடாதேவி(55), ராணி தேவி (30), சீதா சபீதா (55) என்பது தெரிய வந்தது. ராணி தேவிக்கு ஒரு வயது கைக்குழந்தை உள்ளது. மேலும், இவர்களிடம் நகையை விற்க சொல்லி வேறு ஒரு பெண் கொடுத்தனுப்பியதாகவும் அவர்கள் கூறினர். இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்த 3 சவரன் போலி நகைகளை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு ெசய்து ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

Related posts

பக்ரீத் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர் திரளாக பங்கேற்பு

காங்கயத்தில் அரசு பேருந்து-கார் மோதல்

கேரளாவிலிருந்து பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு அன்னாசி பழம் வரத்து அதிகரிப்பு