போர்ஷே டென்னிஸ்: அரை இறுதியில் ஆஷ்லி

ஸ்டட்கர்ட்: ஜெர்மனியில் நடைபெறும் போர்ஷே கிராண்ட் பிரீ டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸி.) தகுதி பெற்றார். கால் இறுதியில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவுடன் (9வது ரேங்க்) நேற்று மோதிய ஆஷ்லி 2-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடி பிளிஸ்கோவாவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த அவர் 6-1 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3வது செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. கடுமையாகப் போராடிய ஆஷ்லி 2-6, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி நேரத்துக்கு நீடித்தது….

Related posts

ஸ்காட்லாந்தை வீழ்த்திய ஆஸி

7000 ரன்களை கடந்து ஸ்மிரிதி சாதனை

சாம்பியன் இத்தாலி சாகசம்