பொள்ளாச்சி-போத்தனூர் இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

கிணத்துக்கடவு: பொள்ளாச்சி – போத்தனூர் வழியாக செல்லும் ரயிலின் வேகத்தை அதிகரிக்க சோதனை ஓட்டம் இன்று நடப்பதால் பொதுமக்கள் தண்டவாளத்தின் அருகே செல்ல வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ரயில்வே தண்டவாளம் உறுதி தன்மையை அறியவும், ரயிலின் வேகத்தை அதிகரிக்கவும், இன்று காலை 7.30 மணி அளவில் திண்டுக்கல் ரயில் பொள்ளாச்சி- போத்தனூர் வழியாக அதிவேக சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. காலை 10:50 மணி வரை இந்த சோதனைஓட்டம் நடக்கிறது. இதில், ரயில் 110 கி.மீ என்ற வேகத்தில் பயணிக்க இருப்பதால், ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தண்டவாளத்தின் அருகே செல்ல வேண்டாம் எனவும், தண்டவாளத்தின் அருகே கால்நடைகள் மேய்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

நெரிசல் மிகுந்த ராயப்பேட்ைட பகுதியில் செப்டம்பரில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி தொடங்கும்: அதிகாரிகள் தகவல்

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் புகைப்படம் தயாரிப்பு 14 வயது சிறுமியின் உருவம் வரைந்து வலைத்தளங்களில் தேடும் பணி தீவிரம்:  2011ம் ஆண்டு ஒன்றரை வயதில் குழந்தை மாயமான புகார்  நீதிமன்ற உத்தரவுப்படி குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னையில் நான்காவது சம்பவம் சிறுமியை ஓடஓட விரட்டி கடித்து குதறிய தெருநாய்கள்: சிசிடிவி காட்சிகளால் மீண்டும் பரபரப்பு