பொய்யான ஆடியோவை பரப்பி கலவரம் ஏற்படுத்த சதி அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்: டிஜிபியிடம் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா புகார்

சென்னை: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சென்னை மண்டல செயலாளர் பக்கீர் முஹம்மது மற்றும் தென்சென்னை மாவட்ட தலைவர் அபூபக்கர் சாதிக் ஆகியோர், தமிழக டிஜிபி அலுவலகத்தில் கூட்டாக நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு ஆடியோ தமிழகத்தில் பாஜ ஒரு சதிச்செயலை திட்டமிடுகிறது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. அந்த ஆடியோவில், அண்ணாமலை பாப்புலர் ப்ரண்ட் குறித்து பல்வேறு அவதூறுகள், ஆதாரமற்ற தகவல்களை பரப்பியதுடன் பாஜ தலைவர்களின் உயிர்களுக்கு பாப்புலர் ப்ரண்ட் அமைப்பினரால் ஆபத்து உள்ளது. எனவே அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விளக்கி இருந்தும் பெரிய அளவிலான மோதலை உருவாக்க வேண்டும். அதன் மூலம் தமிழகத்தை வட இந்தியா போல் ஒரு மத பதற்றம் நிறைந்த கொதிநிலை மிக்க மாநிலமாக மாற்ற முயற்சிக்கின்றனர் என்பது தெரியவருகிறது.  இதுபோன்ற பொய்யான ஆடியோவை பரப்பி தமிழகத்தில் கலவரத்தை பரப்ப சதி செய்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. பொய்யான ஆடியோவை பரப்பிய அண்ணாமலையை கைது செய்து தமிழக அரசு விசாரணை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்