பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரி, ஜூலை 7: கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு, உடனுக்குடன் நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, நாளை (8ம் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம், அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி வட்டத்தில் பெல்லம்பள்ளி, ஊத்தங்கரை கெங்கப்பிராம்பட்டி காமராஜ் நகர், போச்சம்பள்ளி நாகோஜனஅள்ளி தரப்பு கம்புகாலப்பட்டி, பர்கூர் ஒப்பதவாடி, சூளகிரி பெத்தசிகரலப்பள்ளி, ஓசூர் நந்திமங்கலம் தரப்பு கர்னப்பள்ளி, தேன்கனிக்கோட்டை போடிச்சிப்பள்ளி தரப்பு இருதாளம், அஞ்செட்டி வட்டம் தக்கட்டி தரப்பு அர்த்தக்கல் ஆகிய கிராமங்களில் குறைதீர் கூட்டம் நடக்கிறது. எனவே, இதில் பொதுமக்கள் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்