பொதுமக்கள் சாலை மறியல்

தியாகதுருகம், மார்ச் 28: தியாகதுருகம் அருகே உள்ள சந்தைமேடு பகுதியைச் சேர்ந்தவர் தஸ்தகீர் மகன் சேட்டு (38). இவர் தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை ஓட்டலில் இருந்து பேருந்து நிலையம் உள்ளே செல்வதற்காக பைக்கில் சாலையை கடக்க முயன்றார். அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து கடலூர் நோக்கி வேகமாக வந்த தனியார் பேருந்து பைக் மீது மோதியது. இதில் சேட்டு படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்ததை கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், வேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தின் கண்ணாடியை அடித்து உடைத்தனர். தகவல் அறிந்த சேட்டுவின் உறவினர்கள் வந்து தியாகதுருகம்-கள்ளக்குறிச்சி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை