பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது கற்பனையான விவாதம்: எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

ஓமலூர்: சேலத்தில்  இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிசாமி நேற்று அளித்த பேட்டி:அதிமுகவில் பொதுச்செயலாளர் என்பதும், ஒற்றை தலைமை என்பதும் கற்பனையான விவாதம். இதை யார் சொல்லி ஊடகங்கள் எங்களிடம் கேட்கிறது என்று தெரியவில்லை. பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது. அது எடுக்கப்பட்டு புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகளிடம் அது  போன்ற எண்ணம் இருப்பதாக ஊடகங்கள் மட்டுமே சொல்கிறது. ஆனால் எங்களிடம் தொண்டர்கள் யாரும் இது போன்ற கோரிக்கையை வைக்கவில்லை. ஆர்வத்தில் என்னை பொதுச்செயலாளர் என்று தொண்டர் ஒட்டிய போஸ்டர் கூட, உடனடியாக அகற்றப்பட்டு விட்டது. சசிகலா என்பவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பந்தியிலேயே இல்லாத ஒருவரைப் பற்றி பேசத் தேவையில்லை. தமிழகத்தை பொறுத்தவரை பிரதான எதிர்க்கட்சி எது? என்ற கேள்வியே தவறானது. ஆளுங்கட்சியை தவிர்த்து அனைத்து கட்சிகளும் தமிழகத்தில் எதிர்க்கட்சி தான். இதில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக மட்டும் தான். இது மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதிக வாக்குகளோடு அதிக சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்ற நாங்கள் தான் பிரதான எதிர்க்கட்சி என்பதை நாங்கள் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை. ஊழல் நடந்துள்ளது என்று நிரூபிக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களை கலைப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதிமுக ஆட்சியிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது.  இவ்வாறு எடப்பாடிபழனிசாமி கூறினார்.* பாஜ வழக்கறிஞரின் துரோகச்செயல்எடப்பாடி பழனிசாமி கூறுகையில், செல்லூர் ராஜூ குறித்து பாஜ வழக்கறிஞர் தெரிவித்திருக்கும் கருத்து மிகவும் தவறானது. நம்பிக்கையின் அடிப்படையில் போனில் பேசுவதை வெளியில் சொல்வது மிகப்பெரிய துரோகச்செயல். நட்பின் அடிப்படையில் பேசியதை வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்றார்….

Related posts

சொல்லிட்டாங்க…

மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

அதிமுக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் ஒன்றிணைந்து செயல்பட சசிகலா அழைப்பு