போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது

 

ஈரோடு, ஆக.8: ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், ஈரோடு மதுவிலக்கு போலீசார் அப்பகுதியில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். ஈரோடு வைராபாளையம் வாட்டர் ஆபீஸ் சாலையை சேர்ந்த கோபால் மகன் உமாபதி (23), அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்தி (19) ஆகியோர் வலி நிவாரண மாத்திரைகளை, போதை மாத்திரைகளாக விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் உமாபாதி, கார்த்தி ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து, அவர்களிடம் இருந்து 52 வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்