பேட்டை அருகே இன்று பரிதாபம் லாரி மோதி 22 ஆடுகள் பலி

பேட்டை: நெல்லை மாவட்டம் பேட்டை அருகே உள்ள நடுக்கல்லூர்  பகுதியை சேர்ந்த பேச்சி மகன் நாகராஜன் (45). 100க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து தொழில் செய்து வருகிறார். இன்று காலை தனக்குச் சொந்தமான 100 ஆடுகளை கல்லூர் ரயில்வே கேட் அருகே மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார். ரயில் கேட் அடுத்த சீதபற்பநல்லூர் சாலையில் குறுகிய திருப்பத்தில் ஆடுகள் சென்ற போது, எதிரே நரசிங்கநல்லூர் பால்பண்ணை தெருவைச் சேர்ந்த தளவாய் மகன் சுவாமிநாதன் (28) என்பவர் ஓட்டி வந்த கிரஷர் மணல் லாரி அசுர வேகத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆடுகள் கூட்டத்தில் புகுந்தது. இதில் 22 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தன. 15 ஆடுகள் படுகாயமடைந்து உயிருக்குப் போராடின.  விபத்தில் ஆடுகள் இறந்ததை கண்ட அதன் உரிமையாளர் நாகராஜன் கதறி அழுதார். உறவினர்கள் அவரை அமைதிபடுத்தினர். காயமடைந்த ஆடுகளை கல்லூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.இதுதொடர்பாக சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி லாரி டிரைவர் சுவாமிநாதனை கைது செய்தனர். ஆடுகள் கூட்டத்தில் லாரி புகுந்து 22 ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது….

Related posts

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி