பெரும்பாறை மலைச்சாலையில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் சங்கு பூக்கள்

பட்டிவீரன்பட்டி, ஜூன் 5: பட்டிவீரன்பட்டி அருகே பெரும்பாறையிலிருந்து தாண்டிக்குடி செல்லும் மலைச்சாலையின் இருபுறமும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக சங்குப்பூக்கள் பூத்து குலுங்குகின்றன. ரோஸ் மற்றும் வெள்ளை நிற சங்கு பூக்கள் பார்ப்பவர் மனங்களை கொள்ளை கொள்ளும் விதமாக தோரணங்கள் கட்டி தொங்க விடப்பட்டது போல உள்ளது. இதனை இம்மலைச்சாலை வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி ரசிப்பதுடன், செல்போனில் புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர். மழைக்காலத்தில் அதிகளவில் பூக்கும் இந்த சங்குப்பூக்கள் தற்போது கோடை மழை பெய்வதால் பூத்துள்ளதாக இப்பகுதி வாசிகள் தெரிவித்தனர்.

Related posts

திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09 கோடி செலவில் பெட்ரோல் பங்க்: சிறைக்கைதிகள் நடத்த ஏற்பாடு

ஜங்ஷன் நுழைவாயிலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் திடீர் பள்ளம் சீரமைப்பு பணி தீவிரம்: 2 நாள் போக்குவரத்து தடை