பெருந்துறையில் கைவரிசை காட்டிய 3 கொள்ளையர்கள் கைது

 

ஈரோடு, ஜூலை 14: பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளையடித்து கைவரிசை காட்டி வந்த கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 23 பவுன் நகைகளை மீட்டு விசாரிக்கின்றனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை மற்றும் காஞ்சிக்கோவில் பகுதிகளில் கடந்த மாதம் பல்வேறு இடங்களில் பூட்டியிருந்த வீடுகளில் கதவை உடைத்து, உள்ளே புகுந்து மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் நடந்தன. இது குறித்து, பெருந்துறை மற்றும் காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவந்தனர். இந்நிலையில் பெருந்துறை போலீசார் நேற்று முன்தினம் வெள்ளோடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருவாரூர் மாவட்டம், செம்மங்குடியை சேர்ந்த ராஜா மகன் சபரீசன் என்கிற சதீஸ் (27), தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியை சேர்ந்த கணபதி மகன் இசக்கிதுரை (25) திண்டுக்கல் மாவட்டம், தென்மாதிமங்கலத்தை சேர்ந்த வெங்கடாசலம் மகன் ராமஜெயம் (30) என்பதும் இவர்கள் 3 பேரும், பெருந்துறை சென்னிமலை ரோடு விக்னேஷ் நகர் மற்றும் பள்ளபாளையம் பகுதிகளில் சமீபத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் 3 பேரையும் போலீசார் கைது அவர்களிடமிருந்து 23 பவுன் நகைகளை மீட்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்