பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் இன்று கிராமசபை கூட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளி லும் இன்று(2ம்தேதி) கிராம சபைக் கூட்டம். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரி க்கை நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினமான இன்று (2ம் தேதி) மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம், அந்தந்த ஊராட்சிமன்ற தலைவர்களால் நடத்தப்பட உள்ளது. ஊராட்சிமன்றத் தலைவர்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு தலைமை ஏற்க வேண்டும். ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கிராம சபைக் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல் வேண்டும். அரசு நலத் திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல் வேண்டும்.அரசு நிர்வாகத் திலுள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டும். மேலும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதித்தல். கடந்த ஆண்டிற்கான கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை. ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்.வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக் கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக் கைகள் குறித்து விவாதித்தல். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்.அனைத்துகிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்பு திட்டம், 2023-24-ம் ஆண்டிற்கான சமூக தணிக்கை செயல் திட்டம்ஆகியவற்றைபொது மக்களுக்கு அறிவித்தல்.

Related posts

மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் தினசரி 16 லட்சம் டிக்கெட் விநியோகம்: மேலாண் இயக்குநர் தகவல்

புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து இன்ஜினியர் படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புழல் டீச்சர்ஸ் காலனியில் நாய் கடித்து சிறுவன் படுகாயம்