பெரம்பலூர் அருகே கீழே கிடந்த சுவாமி சிலைகள்

பெரம்பலூர்,செப்.21: பெரம்பலூர் அருகே கல்பாடி கிராமத்தில் உள்ள விநாயகர் கோயிலில் 3 கற்சிலைகளை மர்ம நபர்கள் கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், கல்பாடி கிராமத்தில் ஆதி திராவிடர் வசிக்கும் தெருவில் விநாயகர் கோவில் உள்ளது. கடந்த 19ம்தேதி இரவு மர்ம நபர்கள் இந்த விநாயகர்கோயிலில் இருந்த 1 அடி உயரமுள்ள எலி வாகன சிலை-1 மற்றும் 1 அடி உயரமுள்ள நாககண்ணி சிலைகள் -2 ஆகிய 3 கற்சிலைகளை கீழே தள்ளி விட்டுள்ளனர். கீழே கிடந்த கற்சிலைகளுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இருந்தும் நேற்று(20ம்தேதி) அப்பகுதியினர் கொடுத்தப் புகாரின்பேரில் மருவத்தூர் போலீசார் கல்பாடி கிராமத்திற்குச் சென்று மர்ம நபர்கள் யாரேனும் விஷமத்தனமாக கற்சிலைகளை கீழே தள்ளி விட்டனரா?, அவர்கள் உள்ளூர்காரர்களா? வெளியூர்காரர்களா? கோயிலில் திருட வந்தவர்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு