பெரம்பலூர் அருகே அரசு மதுபாட்டில்களை பதுக்கி விற்ற கைது: 361 பாட்டில்களுடன் கைது

பெரம்பலூர், ஏப்.16: பெரம்பலூர் அருகே அரும்பாவூர் பாரதிபுரத்தில் அரசு அனுமதியின்றி டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த நபரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 361 பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடைசெய்ய ப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது மற்றும் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று (15ம் தேதி) பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூர் கிராமம், பாரதிபுரத்தில் அரசு அனுமதியின்றி மறைமுகமாக மதுபாட்டில்களை விற்பனை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்படி பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி பழனிச்சாமி மேற்பார்வையில் அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி (பொறுப்பு) மற்றும் அவரது குழுவினர் அரும்பாவூர் பாரதிபுரம் சென்று சோதனை யிட்டனர். அதில் அங்கு அரசு அனுமதியின்றி அரசு டாஸ்மாக் மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூர் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் குமரேசன் (23) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து, மொத்தம் 361 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி பழனிச்சாமி உத்தரவின்படி அரசு டாஸ்மாக் மதுபாட்டில்களை அனுமதியின்றி சட்ட விரோதமாக விற்பனை செய்த குமரேசனை அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் (பொ) விஜயலெட்சுமி ஸ்டேசனுக்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தார். இதுபோன்று தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடைசெய்யப்பட்ட நாட்டு சாராயம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அரசு அனுமதியின்றி டாஸ்மாக் மது பாட்டில்கள் விற்பனை செய்தாலோ பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலக தொலைப்பேசி எண் 94981 00690 என்ற தொலைப் பேசியினை தொடர்பு கொள்ளலாம். ரகசியம் காக்கப்படும். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அரும்பாவூர் போலீசாரை பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி பாராட்டினார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்