பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் 11ம் தேதி நடக்கிறது

பெரம்பலூர்,ஏப்.5:பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 11ம் தே தி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது என கலெக் டர் கற்பகம் தெரிவித்துள்ளார். இதுகு றித்து அவர் தெரிவித்திருப்பதாவது : மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்திட அரசு ஆ ணையிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி தலைமையில் வருகிற 11ம்தேதி மாலை 3 மணி அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் தங் களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு தக்க சான்றுகளுடன் நேரில் அளிக்கலாம். இந்த கோரி க்கை மனுக்கள் அனைத் தும் சம்மந்தப்பட்ட அலுவ லர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஆவணச் செய்யப்படும்.எனவே மாற்றுத்திறனாளி கள் இச்சிறப்பு குறைதீர்க் கும் முகாமில் கலந்துக்கொ ண்டு பயன்பெறலாம் எனத்தெரிவித்துள்ளார்.

Related posts

அபார வளர்ச்சியால் விரிவடையும் மாநகராட்சி புதிதாக 50 ஊராட்சிகளை இணைத்து 250 வார்டுகளாக அதிகரிக்க திட்டம்: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைப்பு

இன்று மற்றும் நாளை இரவு கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு:  உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு  விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை